Monday, April 16, 2012

கடன் அட்டை-Credit card


கடன் அட்டைதெரிந்ததும் தெரியாததும்
'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.' எது எப்படி இருந்தாலும் 'நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும்கடன் இல்லாத வாழ்கையே இன்பமானது,'
ஆனால்இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டதுஇத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது.
ஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விடகடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அது மட்டுமில்லாமல் இன்று தனியார் வங்கிகள் தொழில் போட்டி காரணாமாக முன்பு போல் இல்லாமல் பல சலுகைகள் தருகின்றனகுறைந்த சேவை நேரம்அதிக சான்று பத்திரமோ,  இதர விளக்க சான்றிதல்களோ தேவை இல்லைஅதிக பட்சமாக வருமான வரி அல்லது மாத ஊதிய சான்றிதல் இருந்தாலே போதுமானதுஒரு பத்து நாட்களில் உங்கள் ஊதியத்தை விட இரு மடங்கு கடன் தகுதியுள்ள அட்டைகள் உங்கள் வீடு தேடி வந்து விடும்.
இது போல் ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து வங்கிகளில் ஒரே நபர் கடன் அட்டையை பெறுவது இன்று மிக எளிதாகிவிட்டதுஆனால்,  இதில் எத்தனை பேருக்கு கடன் அட்டை(யை)களை முறையாக பராமரிக்க தெரியும் என்றோ கேட்டால் கிடைக்கும் பதில் மிக வேடிக்கையாகவே இருக்கும்.
மேலும்,  இதன் அடிப்படை புரியாததால் இன்று எத்தனையோ பேர் நல்ல வேலை மற்றும் ஊதியத்தில் இருந்தும் கூட வாங்கும் முழு ஊதியத்தையும் கடன் அட்டைக்கு வட்டி கட்டி விட்டுமீண்டும் அந்த மாத வாழ்க்கைக்கு அதே அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்து எப்போதும் மன உளைச்சலுடன் கடனிலேயே வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதில் நம் கணினி துறையின் சதவீதம் தான் அதிகமாக இருக்கும் என்று இங்கு நான் தனியாக ஒரு முறை சொல்ல தேவையில்லைஎதோ,  இன்றைய அவசர உலகத்தில் கடன் அட்டையின் அவசியத்தை மற்றும் பாதுகாப்பை பற்றி புரியாமல்கடன் அட்டைக்கு எதிராக சொல்வதாக நினைக்க வேண்டாம்
கடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம்இதில் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சுருக்கமாக வேண்டியதை மட்டும் பார்ப்போம்.
1. கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?
2. தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?
3. கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?
கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?
கண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல்முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.
கடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம்மேல் சொன்னபடி தனியார் வங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றனமூன்று வருட இலவச சேவைஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவைஅதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.
இதில் கவனிக்க வேண்டியதுவங்கி விற்பனை ஏஜன்ட்களின் வெறும் வாய் பேச்சை மட்டும் நம்பாமல் அதற்கான எழுத்து ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருங்கள்இதனால் இடைப்பட்ட இலவச சேவை காலத்தில் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்தால் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற இது உதவும்.
உங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள்நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால்உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்துஅதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள்உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.
மாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபட்டாலும்பொதுவாக 29 முதல் 31நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும்எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும்உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
முடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள்இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
ஆக மொத்தத்தில்எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன்அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.
தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும்எல்லோராலும் அதை முழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.
அப்படியும் முடியாதவர்கள்எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம்இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.
கடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன்உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்மேலும்நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
வெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்லஅவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லதுமிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.
எப்போது கடன் அட்டையை பயன்படுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய "மாத சேமிப்பில்மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லதுஇதனால்உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது.
மேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால்குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்துமுடிந்த வரை அதிகமாக கட்டுங்கள்.
முடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும்.இதனால் மேலும் வட்டிதாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.
மிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம்எதிர்பாராத விபத்துவேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?
மேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போதுகடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லைஇருந்தாலும் தேவையற்ற இடங்களில்நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போலஅது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.
நண்பர்களிடம்மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும்அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும்கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.
எப்போதும் உங்கள் கடன் தொகைஉங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம்இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.
மேற்ச்சொன்னபடி குறைந்த பட்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும்அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல்நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம்உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால்உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.
வங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் சிவில் தளத்தில்உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனைஅதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.
அதாவதுஉண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில்உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாதுஅடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து தூக்கில் போட போவதில்லை.
இதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன்நாளை கட்டி விடுகிறேன்என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால்பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள்ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால்அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால்அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிரவேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.
பல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டுஅதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள்ரவுண்டு ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால்சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
மேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போதுகுறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.
கடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல்குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து "தேவை என்றால் உதவி பெற்றுமுடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டுதவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.
ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும்தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.
இப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்துஇருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.

Saturday, April 14, 2012

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!


மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள். 

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி
மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை
மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.
முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை
மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு
ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு
நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம்
ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.

4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப
வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு
சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும்  ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு  ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது. 

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.


7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்
போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு
மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம்
கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!

9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை
செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை
கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.
நன்றி :உணவு உலகம் 

Wednesday, April 11, 2012

தூங்கும் பொழுது கனவுகள், காரணம் என்ன ?


பகலில் வேட்டையாடி களைப்படைந்ததாலும், பழங்காலத்தில் இரவு இருட்டில் வேறு செயல்களை செய்ய முடியாததாலும் மனிதன் ஓய்வெடுத்துப் பழகிய பழக்கமே காலப்போக்கில் தூக்கமாக மாறியது. உடலுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் தூக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. உடலில் நிறைய ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இவ்வாறு உடலில் சுரக்கும் வெவ்வேறு ஹார்மோன்களையும் நமது உடலிலுள்ள வெப்பநிலை, அதாவது உடல்சூடு தான் `கண்ட்ரோல்` பண்ணுகிறது. நமது உடலிலுள்ள வெப்பநிலை இரவிலும், பகலிலும் மாறி மாறி இருக்கும். அதாவது இரவில் குறைந்தும், பகலில் அதிகமாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி உடல் வெப்பநிலை இருப்பதனால்தான் இந்த ஹார்மோன்களும் மாறி மாறி சுரக்கின்றன.
உடலின் வெப்ப அளவு, உடல் சுரக்கும் `என்சைம்’ இவை இரண்டும் சேர்ந்து `அடினோசின்’ (Adenosine) என்கிற திரவத்தை சுரக்க வைக்கிறது. இந்த அடினோசின் நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்குச் சென்று நாம் விழித்திருக்காமல் இருக்க என்னென்ன தடங்கல்கள் எல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து நம்மை தூங்க வைத்து விடுகிறது. `
அடினோசின்’ (Adenosine) பகல் முழுக்க உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அதிக அளவில் நரம்பு மண்டலத்தில் `அடினோசின்’ இருந்தால் தூக்கம் சீக்கிரமாகவே வந்து விடும். மனிதர்களைப்போல் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் சில விலங்குகளுக்கு `மெலடோனின்’ (melatonin) என்கிற ஹார்மோன் தூக்கத்தை உண்டு பண்ண மிகவும் உதவியாய் இருக்கிறது.
இலை தழைகளைத் தின்று வாழக்கூடிய மிருகங்களெல்லாம் தன்னை யாராவது அடித்துத் தின்று விடுவார்களோ என்ற பயத்திலேயே அவைகள் ஒழுங்காக நிறைய நேரம் தூங்குவதில்லை. ரொம்ப குறைவான நேரமே தூங்கும். அதே நேரத்தில் மாமிசம் தின்று வாழக் கூடிய சிங்கம், புலி போன்ற மிருகங்கள் மற்ற மிருகங்களுக்குப் பயப்படாது.
ஆகவே ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் கூட இவைகள் நன்றாகத் தூங்கும். மிருகங்கள் தூங்கும்போது உடலிலுள்ள வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. சரியான தூக்கம் இல்லையென்றால் உடலிலுள்ள காயங்கள் ஆறுவது கூட பாதிக்கப்படும் என்றும், உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் கொஞ்சம் குறைந்துவிடும் என்றும் 2004-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
நிறைய நேரம் தூங்கும் சில பாலூட்டி விலங்குகளுக்கு, உடலில் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதாகவும், அவைகளின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் (ஆர்.பி.சி.) அதிக அளவில் இருப்பதாகவும், குறைவான நேரம் தூங்கும் விலங்குகளுக்கு, வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், இதே ஆய்வு கூறுகிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதுதான் மனிதர்களுக்கு கனவு வரும்.
நம் வாழ்க்கையில் நிகழும் சில விஷயங்கள் (உதாரணமாக அடுத்த நாள் தேர்வுக்கு நீங்கள் படித்தவை, உங்கள் செல்ல பூனைக்குட்டியின் பெயர்…) மூலையில் தற்காலிகமாக ஒரு இடத்தில சேமிக்கப்படுகிறது. இந்த இடத்தில சேமிக்கப்பட்ட தகவல்களைத்தான் நாம் கனவாக காண்கிறோம்.
நாம் பார்க்கிற காட்சிகள், சந்திக்கின்ற நபர்களின் பேச்சுக்கள், செய்கைகள், கேட்கிற சத்தங்கள், ஆகியவற்றின் பதிவுகள் ஒன்றாகக் கலந்து ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் தூங்கும்போது திரும்ப வருவதுதான் கனவு. இந்தக்கனவு ஒரு காட்சியாக வராமல் சினிமா போல நீண்ட ஸீனாக வரும். நாம் காணும் கனவுகளில் அநேகமாக நாம் இல்லாமல் கனவு வருவது என்பது மிகமிகக் குறைவு.
அம்னீசியா (Amnesia) உள்ளவர்களால் இந்த தற்காலிக சேமிப்பு இடத்தில எதையும் சேமிக்க முடியாது. எனவேதான் அவர்களுக்கு மறதி ஏற்படுகிறது. அதோடு அம்னீசியா உள்ளவர்கள் கனவு காண்பதும் குறைவு.
எல்லாக் கனவிலும் நாம் கண்டிப்பாக இருப்போம். நாம் தானே கனவு காண்கிறோம். அப்படியிருக்கும்போது அந்தக்கனவில் நாம் இல்லாமல் எப்படி? மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள `பான்ஸ்’ என்கிற உறுப்பு தான் கனவைத் தூண்டிவிடுகிறது. பெரும்பாலும் கண்கள் சுற்றும் தூக்க நிலையில்தான் கனவுகள் அதிகமாக வரும். கண்கள் சுற்றும் தூக்கம் பற்றி பிறகு சொல்கிறேன்.
அதற்குமுன் கனவைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். “நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பு தான் கனவு” என்கிறார் `உளவியலின் தந்தை’ என்று போற்றப்படும் `சிக்மெண்ட் பிராய்டு’. `அப்படியா? நிறைவேறாத ஆசைகளா கனவாக வருகிறது?’ என்று யோசிக்கத் தொடங்கிவிடாதீர்கள். அதற்கு அவர் ஏராளமான விளக்கங்கள் தந்திருக்கிறார்.
ஆனால் பல நினைவுகளின் தொகுப்புக் காட்சியே தூங்கும்போது கனவாக வருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தூக்கத்தில் கனவைத் தவிர வேறுபல அனுபவங்களும் மனிதர்களுக்கு ஏற்படும்…
“என் குழந்தை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்குகிறான்”
“என் குழந்தை கண்ணின் கருவிழி தூங்கும்போது பம்பரம் மாதிரி சுத்துது”
“என் வீட்டுக்காரர் ராத்திரி தூங்கும்போது கதவைத் திறந்துகிட்டு எழுந்து வெளியே போகிறார்”
“என் பையன் தூங்கும்போது, அடிப்பேன், உதைப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என்று உளறுகிறான்”
இப்படி பலபேருக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். இதற்கெல்லாம் கண்கள் சுற்றும் தூக்கமும், கண்கள் சுற்றாத தூக்கமும் தான் காரணமாகும்.
தூக்கம் நமது வாழ்வில் மிக முக்கியம்… தூக்கமின்மை உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
நன்றி :உலக மருத்துவம்