இன்றய நவீன மருத்துவத்தில் இதய பாதிப்பினை அளவிடுவதில் பலவழிகள் கையாளப்படுகின்ற போதிலும் மரபுவழியான முறைகளும் தொடர்ந்தும் இருந்துவருகின்றன. இன்றய உலகில் சாதாரண மக்களினாலும் இதய துடிப்பினை, அமுக்கத்தினை அளக்கும் கருவி (Sphygmomano meter) பாவிக்கும் வசதி உள்ளது. இதய பாதிப்பானது 1ம் ,2ம் ,3ம் நிலை பாதிப்புக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. 1ம், 2ம் நிலைகளான பாதிப்பானது உடற்பயிற்சி, உணவுமுறைகள், வாழ்க்கை முறைகள், மருந்து மாத்திரைகளினாலும் குணப்படுத்தக்கூடிய போதிலும் 3ம் நிலையான முற்றிய நிலையானது சத்திரசிகிச்சை மூலமே சாத்தியமாகின்றது. எனவே, வருமுன் காக்கும் பணி என்பது உங்கள் கைகளிலேயே உள்ளது.
இதயமானது சுருங்கி விரிவதனால் உடலுக்கு வேண்டிய ஒட்சியின் மற்றும் ஊட்ட சத்துக்கள் நாடி நரம்பு மூலமாக இரத்தத்தினால் காவப்படுகின்றது. இந்த தொழிற்பாடானது இருவழிகளில் பாதிப்பாகும்போது உறுப்புக்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. இதயம் மட்டுமே பாதிப்பதால் அல்லது இரத்தத்தினை எடுத்துச்செல்லும் நரம்புகள் பாதிப்பாவதால் மேற்படி தாக்கம் உண்டகின்றது. மனித உடலில் இரத்தமானது இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப உயர்வு (systolic), தாழ்வு (diastolic) வேகத்தில் நரம்புகளினூடு பயணிக்கின்றது. ஆரோக்கியமான இதயமானது 120/80 mmHg எனும் அளவின் வாசிப்பில் இருந்து மாறுபடுமாயின் இதயபாதிப்பு நிரூபணமாகின்றது. (மேலுள்ள நரம்பு மண்டல வாசிப்பு முறையே இதயத்தின் விரிவு, சுருக்க அமுக்கங்களினால் உண்டான மில்லிமீற்றர் இரச வாசிப்பாகும்.) இரத்த அழுத்த வாசிப்பு அதிகரித்து காணப்படும் நிலை உயர் அழுத்தம் (Hypertension) எனவும் குறைவடைந்து காணப்படும் நிலை குறைந்த அழுத்தம் (Hypotension) எனவும் அழைக்கப்படும். உயர்வழுத்தம் போன்று குறைவழுத்தமும் உடலுக்கு தீங்கானது. குறைவழுத்தம் இருப்பின் மூளை உட்பட உடலுறுப்புக்கழுக்கு வேண்டிய இரத்தோட்டம் குறைவடைவதனால் பல உறுப்புக்களும் பாதிப்புக்குள்ளாவதுடன் மயக்கம் சோர்வு போன்ற தன்மைகள் காணப்படும்.
இதயகோளாறு தோன்றுவதற்கு சிறுநீரகத்தினதும் மூளையினதும் சுரக்கப்படும் வேதிப்பொருள் முக்கியபங்கு வகிக்கின்றது. இதனால் சிறுநீரகம் பாதிப்படையும் பட்சத்தில் உயரழுத்தம் வருவது தவிர்க்கமுடியாத ஒன்று. இத்தகைய உயரழுத்தம் 2ம் படிநிலை (secondary) இதயத்தாக்கமாகும். சிறுநீரகம் பாதிப்பினால் உப்புக்களை வடிகட்டுவதிலும் Renin வேதிப்பொருளை சுரப்பதில் உள்ள பாதிப்பினால் உடலில் தங்கும் நீர் இரத்தத்தில் அதிகரிப்பதனால் உயரழுத்தம் உண்டாகின்றது.
இதய பாதிப்பு அல்லது கோளாறு பின்வரும் அறிகுறிகளினால் வெவ்வேறு பெயருடன் வரையறுக்கப்படும்.
Coronary Heart Disease (CHD)
மனித உடலில் இதயத்தினதும் ஏனைய பாகங்களிலுமுள்ள நாடி நரம்புகளின் உட்சுவரானது கொலஸ்ரோல் கொழுப்பு படிவத்தினால் பாதிப்பதில் உண்டாகின்றது. கொழுக்கு படிவதால் உண்டாகும் பாதிப்பினால் நரம்பு துளைகள் சிறிதாவதால் இதயம் உட்பட உடலின் பலபாகத்திற்கான இரத்தோட்டம் தடைப்படுவதுடன் இரத்த அழுத்தமும் மிக அதிகரிக்கின்றது. இந்தவகை பாதிப்பிற்கு இருவகையான சத்திரசிகிச்சைகள் மட்டுமே தீர்வாகின்றது. இந்த இரு சத்திரசிகிச்சைகளாவன Bypass , Angioplasty என்பனவாகும். Bypass எனப்படுவது தடுப்புக்குள்ளான நரம்பினை இன்னொரு வழியில் தொடுப்பதாகவும் Angioplasty என்பது அடைக்கப்பட்ட பகுதியில் பலூன் போன்ற விரிசலை உண்டாக்கி இரத்த ஓட்டத்தினை சீராக்குதலையும் குறிக்கும்.
Angina
நெஞ்சுப் பாகத்தில் நோவு அல்லது அமுக்கம் போன்ற தன்மை வருவதும் போவதுமான நிலை இவ்வகையினது. அத்துடன் இடது தேள் மூட்டில் அல்லது இடக்கைப்பாகத்தில் மிகுந்த வலி அல்லது நோவு உணரப்படும் நிலையும் காணப்படும். இந்தவகையன தன்மையானது 1ம் வகையினை சார்ந்த அறிகுறியாவதுடன் சிலவகை பாரிய சுமை சுமப்பதும் காரணமாகின்றது.
Heart Attack
திடீர் நெஞ்சுவலி, உடல் வியர்த்தல், மூச்சுவிடுவதில் சிரமம், சிறு தலைவலி இவற்றுடன் சிலசமயங்களில் சுயநினைவிழத்தலும் சேர்ந்த தன்மை இவ்வகையினது. மேற்படி அறிகுறிகள் சிலசமயம் சிறியளவில் உணரப்படுவதுடன் உயிருக்கும் முடிவாகின்றது.
Heart Failure
இதயம் இரத்தம் அமுக்கும் செயற்பாட்டினை சரிவர செய்யாத செயற்பாடு இவ்வகையினது. இப்பாதிப்பில் உட்பட்டவரின் வையிற்றுப்பாகம், பாதம், கால் பாகங்களில் வீக்கம் காணப்படுவது அறிகுறியாகும். மேற்படி அறிகுறியுடன் கழைப்பு, மூச்சுவிடுவதில் பாதிப்பும் காணப்படும்.
Stroke
உடலிலுள்ள நரம்புகள் தடிப்படைந்து விறைப்பாவதால் மூளைக்கான இரத்தம் வழங்கல் குறைவடைவதனால் ஏற்படும் கோளாறு. மூளையில் உள்ளநரம்புகளில் இரத்தகட்டி அடைப்பு அல்லது இரத்தநரம்புகளின் வெடிப்பு காரணமாக மூளையின் குறித்த பாகத்தில் உண்டாகும் பாதிப்பு பல உறுப்பு பாதிப்புக்கு காரணமாகின்றது. மேற்படி தாக்கம் காரணமாக எந்த உறுப்புக்களை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி பாதிப்பு ஏற்பட்டது என்பதனை பாதிபுள்ளானவரின் கண்பார்வை, பேச்சு, ஞாபகசக்தி, கேட்டல், எழுந்து நிற்பதில் அல்லது நடப்பதில் சிரமம் அல்லது சமநிலை இழப்பு என்பவற்றை வைத்து அறியமுடியும்.
Peripheral Vascular Disease(PVD)
இது பொதுவாக நரம்புகளின் துவாரம் கொழுப்பு படிவத்தினால் சிறிதாவதால் உண்டாகும் குறைபாடு இவ்வகையினது. இந்தவகையினர் கால்களில் விறைப்பு மற்றும் உழைச்சல் அறிகுறிகளை உணர்ந்தவண்ணம் இருப்பர். பொதுவில் உயரழுத்தம், புகைப்பிடித்தல், நீரிழிவு (சக்கரை வியாதி) உள்ளவர்கள் இத்தாக்கத்தில் வருகின்றனர். மேலும் ஆண்களில் பிறப்புறுக்கு பகுதிக்கான இரத்தோட்டம் குறைவது காரணமாக ஆண்மையினை இழந்தும் விடும் தன்மை இவ்வகையில் அடங்கும்.
மேற்படி இதயக்கோளாறு வகைகளை மருத்துவ முறையில் அறியும் முறைகள் சுருக்கமாக வருமாறு .
- கண்ணின் விழித்திரையின் பாதிப்பினை அறிதல்.
- சிறுநீர் சோதனைமூலமாக சிறுநீரக பாதிப்பினை அறிவதால்.
- நெஞ்சின் x-ray படத்தின் மூலமாக இதய அளவினை அளப்பதால்.
- இதயத்துடிப்பின் மினியல் வடிவமூடாக அறிதல்(ECG-ElecroCadioGram)
- இரத்த சோதனைமூலமாக கொலஸ்கோல் உள்ளிட்ட கொழுப்பு விகிதத்தினை அளவிடுதல் மூலம் அறிதல் என்பன குறிப்பிடத்தக்கன.
உதாரணமான இரத்தழுத்த வாசிப்புக்களும் அதன் அபாயத் தன்மையும்.
- 120/80 mmHg ஆரோக்கிய நிலை.
- 130/80 mmHg ஆரம்ப அறிகுறி, 5 வருடத்தின் பின்னர் மீள வாசிப்பு எடுக்கப்படும்.
- 130/80 mmHg-139/89 mmHg அறிகுறி நிலை, வருடம் ஒருமுறை வாசிப்பு எடுக்கப்படும்.
- 140/90 mmHg-159/99 mmHg 1ம் வகை உயரழுத்தம், மருத்துவ ஆலோசனை தேவை. 2 தொடங்கி 3 மாதத்தில் வாசிப்பு எடுக்கப்படும்.
- 160/100 mmHg 2ம் வகை உயரழுத்தம், மருத்துவ ஆலோசனை தேவை. மருந்து மாத்திரைகளுடன் வாசிப்பும் அடிக்கடி எடுக்கப்படும்.
- 180/110 mmHg 3ம் நிலை மிகவும் முற்றியநிலை, சத்திரசிகிச்சை தவிர்க்கமுடியாதது.
வருமுன் காத்தல் அல்லது தடுப்பு முறைகள்.
இதய வியாதி அல்லது உயரழுத்தம் உண்டாக இரு காரணிகளாக உப்பு (salt) , கொழுப்பு (fat) என்பன முக்கிய காரணிகளாகும். உப்பானது உடலில் தண்ணீர் விகிதத்தினை அதிகரிப்பதாகவும் கொழுப்பு நரம்புகளில் படிவதிலும் உடலில் தேங்குவதனாலும் அல்லது சேமிக்கப்படுவதனாலும் உயரழுத்தத்திற்கு காரணமாகின்றது.
எனவே உணவுப் பழக்கவழக்கத்தினாலும் வாழ்க்கைமுறையினாலும் உயரழுத்தம் அல்லது இதய தாக்கம் தடுக்கப்படலாம் என்பதனை மறக்கவேண்டாம். வாழும் சுற்றாடலில் தனிமனித மனழுத்தமும் பிறகாரணியில் முக்கியமானது. மன அழுத்தமில்லாத வாழ்க்கைமுறையை நாமாக உருவாக்கப்பழகினால் மட்டும் இதிலிருந்து தப்பலாம். அத்துடன் போதியநித்திரை, உடற்பயிற்சி, யோகாசனம், சிறந்த வாசனைகளை நுகர்தல், தூய நீர் அருந்தல், திறந்த காற்றோட்டம், மகிழ்வானதும் கவலையில்லாத்துமான சிந்தனை என்பனவும் உயரழுத்தம் தடுப்பதில் முக்கியமானது.
உணவுமுறையில் பழங்கள், காய், விதைகள், மரக்கறிகள் என்பவற்றுடன் விற்றமின் , நார்ச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளும் சேர்ப்பது முக்கியமானது. மேலும் உப்பு, கொழுப்பு அதிகமான உணவுகளையும் மாமிசத்தில் அதிகம் சிவப்பு நிறம் உள்ள இறச்சிவகைகளும் தவிர்ப்பதில் தடுப்புமுறை அடங்கியுள்ளது. வாழ்க்கைமுறையில் புகைத்தல், மதுப்பழக்கம் (குடிப்பழக்கம்), உடற்பயிற்சி இல்லாமை (சோம்பல்) தவிர்க்கப்படுவதால் நோய் தடுக்கப்படும்.
சில சிறந்த மரக்கறிகளும் பழங்களும்..........
வெள்ளைப்பூண்டு, வெங்காயம், கரட், காளான், செலரி, கோவா, சோளம், அவரைவகை, பயிற்றைவகை என்பன குறிப்பிடத்தக்க சில மரக்கறி வகைகள்.
திராட்சை, அப்பிள், வாழை, மா, கொய்யா, தோடை, அவக்காடோ, இளநீர் என்பன சிறந்த சில பழ வகைகள்.
No comments:
Post a Comment