Saturday, May 12, 2012

மருத்துவ குணம் பூண்டு மருத்துவ மருத்துவ குணம் பூண்டு குணம் பூண்டு

தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் பூண்டு!: பூண்டு வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பலன்கள்: பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும். ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

பூண்டின் இன்றியமையாத பயன்கள்: பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டுப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

1 comment:

  1. vinitha said...
    நண்பர் ஒருவர் ஈஷா பற்றி ஒரு கட்டுரை எழுதிஉள்ளார்அதனை நீங்கள் படித்து பாருங்கள்.

    நானும் ஈஷா வகுப்பு இல் பல பயிற்சிகளை முடித்துளேன். அதற்கு பல வாரங்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். அந்த பணத்தை ஈஷா உண்டியலில் போட்டு உள்ளேன்.

    இந்த விளம்பரத்திற்கு( நடிகர் சூரியா) வேறு நடித்து இருந்தர்.

    ஒரு நாள் என் சொந்தக் காரரை பார்த்தேன். அவர் ஒரு (வனவாசி) கிராமத்தில் சேலம் மாவட்டம் வசிக்கிறார். அவருடைய பையன் நன்றாக படிக்கிறான் என்றார். ஆனால் இங்கு உள்ள அரசு பள்ளியில் நன்றாக சொல்லித் தரவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை.
    http://tamilnanbargal.com/node/35008


    இதற்கு என்னுடைய பதில்,

    நீங்கள் கூறியவை சில விசயங்கள் சரி....ஆனால்
    1. நாம் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்வோமே.
    2. ஈஷா கல்வி திட்டம் என்பது இலவசம் என்று எங்கும் அவர்கள் குறிப்பிடவில்லை.
    3. எதுவும் இலவசமாகக் கொடுத்தால் அதற்க்கு மதிப்பு சீக்கிரமாக போய்விடும், இது எங்கள் குரு வேதாத்திரி மகரிஷியின் கூற்று.
    4. எனக்குத் தெரிந்த வரை யோகவை சரியான முறையில் கற்றுக் கொடுக்கிறார்கள் ஈஷாவில்.
    5. இன்றைய குறைபாடே வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் சரியான வழிகாட்டுதல் இல்லாததுதான். ஆனால் சத்குரு அவருடைய சிஷ்யர்களுக்கு கண்டிப்பாக சரியான வழிகாட்டிதான் இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete