Tuesday, September 03, 2013

குங்குமப்பூவின் மகிமை



 குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்துபோல் போட்டு, அரைமணிநேரம் கழித்து கழுவுங்கள். இரும்பு சத்துக் குறைவினால் உண்டாகும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
 
• அல்சரினால் குடல் புண்ணாகி வெந்துபோயிருக்கும். காய்ச்சிய பாலில் நாலு குங்குமப்பூ சேர்த்து ஒரு மண்டலம் குடித்துவர, புண் ஆறிவிடும்.

• கர்ப்பிணிப் பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் இரண்டு குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்துவர இரும்புச் சத்து உடலில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.
 
• நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன் குங்குமப்பூ கீறல் 15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மீது தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இவ்வாறு வாரம் ஒருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போயேபோய்விடும். மேலும் வராமல் தடுக்கும்.

• இரண்டு ஸ்பூன் பாலில் ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பைப் போட்டு ஊற வையுங்கள். இதனுடன் பத்து குங்குமப்பூ கீறலைச் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். டல்லான முகமும் டாலடிக்கும்!

• வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவைச் சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும்.
 
• குழந்தை பிறந்ததும் தாய் மூன்று கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் 
வெளியேறும்.
 
• 25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் குங்குமப்பூவைக் கலந்து கொடுத்துவந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.

thanks to maruthuva ulagam

No comments:

Post a Comment