Showing posts with label கர்ப்பிணிகள். Show all posts
Showing posts with label கர்ப்பிணிகள். Show all posts

Tuesday, September 03, 2013

கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன.. மாற்றங்கள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.

முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.
உங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.

மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.

அதிகமான சோர்வை அதிகபட்ச பெண்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.

மார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.

கருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.

இரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.
இடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.
நெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.

கர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன.
அரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.

சாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.

குழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.
உணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.

மூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.

நீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.

மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.

குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.

உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.

இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்.

thanks  for kumutham

Tuesday, July 16, 2013

கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீங்கள் கர்ப்பம் என்பது தற்போது உறுதிசெய்து இருக்கீறீர்கள் என்றால் உங்களுக்கு பலர் ஆலோசனை கூறுவார்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நண்பர்கள் வட்டம் என அனைவரும் உணவு சம்பந்தமான அறிவுரையிலிருந்து அனைத்தையுமே கூறுவார்கள். உணவு வகைகள் அனைத்துயும்  சாப்பிட முடியாது. சாப்பிட நினைத்தாலே வாந்தி வரும் என பல மாறுதல்கள் நமது உடலுக்குள் நடக்கின்றது.. கர்ப்பகாலத்தில் ஆபத்தை  விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் ஏனெனில் கர்ப்பகாலத்தில் ஒவ்வாத உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்  உணவாக உள்ளது.. கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இதோ

சீஸ் வகைகள்

கர்ப்ப காலத்தில் சீஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். பல வகை சீஸ்கள் உள்ளது. மென்மையான பாலாடைக்கட்டியான வெள்ளை நிறத்ததில் உள்ள  பாலாடைக்கட்டியில் நீல நிறங்களை சேர்க்கின்றனர். வெண்ணெய் தயாரித்தலில் அச்சு பயன்படுத்தும் போது லிஸ்டீரியா சேர்க்கப்படுகிறது.  லிஸ்டீரியா சேர்ப்பது அரிதானது என்றாலும் நோய் தொற்றை ஏற்படுத்தி கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பதற்கும் வழிவகுக்கிறது. பல  உணவுகளில் லிஸ்டீரியா பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வெண்ணெய் சாப்பிட விருப்பப்பட்டால் கடின  தன்மை கொண்ட வெண்ணையான சீதார்(நீலீமீபீபீணீக்ஷீ) பாலாடைக்கட்டியை சாப்பிடலாம். அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது.

முட்டைகள்


கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் முட்டைகளை சாப்பிடலாம் ஆனால் நன்கு வேகவைக்காத முட்டைகள் சால்மோனெல்லா பாக்டீரியாவை  கொண்டிருப்பதால் சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் நன்கு வேகவைத்த முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்கு சமைக்கப்படாத  முட்டையுடன் சேர்த்த பொருட்களில் மேயனைஸ் கொண்டிருப்பதால் அவை கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் தவிர்க்க பட வேண்டியது. முட்டையின்  மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை நன்கு வேகவைத்த பின் சாப்பிட்டால் பாதுகாப்பானது.

வைட்டமின ஏ அதிகளவு கொண்டிருக்கும் உணவுகள்


முன்பு சாப்பிட்ட உணவுகளில் வைட்டமின் ஏ எடுத்துக்கொண்டதை விட குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வைட்டமின் ஏ நிறைந்த  உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். கல்லீரல் போன்றவை அதிக வைட்டமின் ஏ கொண்டுள்ளது. 

குறிப்பிட்ட மீன் வகைகள்

தயார் நிலையில் வைக்கப்பட்ட மீன் வகைகளான டுனா, ஸ்வோர்டுபிஷ்ஷில் மற்றும் சுறா மீன்கள் போன்றவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை  பாதிக்கும் பாதரசத்தை உயர்ந்த அளவு கொண்டுள்ளது. எண்ணெய் பசை அடங்கிய மீன்களான சல்மான் பிரஷான டுனா கானாங்கொளுத்தி, ஆகியவை  பாதுகாப்பானது. வாரத்தில் ஒரு முறை சாப்பிடும் போது இரண்டு துண்டு மீன்களை எடுத்துக்கொள்ளலாம்.

காஃபின்

காஃபின் பல்வேறு உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் கலக்கப்படுகிறது. காஃபின் குறைந்த எடையுள்ள குழந்தை மற்றும் கருச்சிதைவு போன்ற  ஆபத்தை அதிகரிகும் ஆதலால் கவனமாக இருக்க வேண்டும்.