Showing posts with label தியானத்தில் அறிவியல் செய்திகள். Show all posts
Showing posts with label தியானத்தில் அறிவியல் செய்திகள். Show all posts

Wednesday, July 20, 2011

மூச்சுப் பயிற்சி ( ஹெலர் வென்டிலே ஷனின் மற்றொரு வடிவமா ?

சில மூச்சுவிடும் நுட்பங்கள் உடலில் இருந்து தீங்கு தரும் பொருட்களை அகற்றி, அதன் இயற்கையான நோய்த்தடுப்பையும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் திறனையும் அதிகரிக்கிறது என்று அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் மற்றும் ஒரு முன்னணி அமெரிக்கப் பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ளன.



மனம் உடல் தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சித்த இந்த முன்னணி மருத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த மூச்சுவிடும் பயிற்சிகள் மூளையின் சில பகுதிகளில் வியத்தகு செயல்பாட்டை அளிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்.



அதே சமயம், இந்த பயிற்சிகளை நெடுங்காலத்திற்கு மேற்கொள்வோரின் மூளையின் இரு அரைக்கோளங்களிலும் அரிதான ஒருங்கிணைப்பைக் காண முடிந்தது.


இதன் பிற விளைவுகளில் புற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுடைய நோயாளிகளில் குறைவாக உள்ள உடலின் இயற்கையான கொல்லும் செல்கள் அதிகரித்தன. ஆன்ட்டி-ஆக்சிடன்ட் என்சைம்களில் அதிகரிப்புடன் உடலின் உடலின் சுத்தப்படுத்தும் திறனும் அதிகரிக்கிறது மற்றும் அழுத்த ஹார்மோன். கோர்ட்டி சோல் அளவு இரத்த ஓட்டத்தில் கணிசமாகக் குறைகிறது.



இந்தப் பயிற்சிகளில் அதிக நம்பிக்கையுள்ளவராக மாறிவிட்ட ஏ.அய்.அய்.எம்.எஸ்.-சில் உள்ள ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை கழகத்தலைவர் வினோத் கொச்சுபிள்ளை கூறுகிறார்: “இந்த பயிற்சிகளை முறையாகச் செய்வோர் தங்களது சிந்தனை ஓட்டம் மற்றும் தங்களது உடலில் மாற்றங்களைக் காணத் தொடங்குகின்றனர்.”



கொலம்பியா பல்கலைக்கழக கல்லூரியின் அசோசியேட் கிளினிகல் மனஇயல் பேராசிரியர் ஆர். பிரவுன் கூறுகிறார். “இந்த பயிற்சிகளுக்குப் பிறகு மக்கள் பிறருடன் மிகவும் அன்பானவர்களாகவும் தொடர்புடையவர்களாகவும் ஆகின்றனர்.”



தங்களது எதிர்மறை உணர்ச்சிகளான வெறுப்பு மற்றும் கோபமும் கூட மெதுவாக அன்பு மற்றும் பரிவால் இடமாற்றம் பெற்றதாக பலர் தம்மிடம் கூறியதாக கொச்சுப்பிள்ளை தெரிவிக்கிறார். குணமாகி வரும் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் பிராணாயாமம் மற்றும் சுதர்ஷன் கிரியா போன்ற யோகப் பயிற்சிகளின் சில வடிவங்களை ஒருங்கிணைக்க இவர் பயின்றுள்ளார்.



இந்த விளைவுகளின் விஞ்ஞான அடிப்படையைத் தெரிந்து கொள்ள ஏ.அய்.அய்.எம்.எஸ்.-சின் குறைந்தது ஏழு துறைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நிலை மன அழுத்தமுடைய குழுக்களில் இருந்து ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:


ஒன்று, இந்த பயிற்சிகளின் நீண்ட கால விளைவுகளை வெளிப்படுத்தக்கூடிய இந்த பயிற்சிகளைப் பயிற்றுவிப்போர், மற்றும் இரண்டு காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியிலுள்ள வேலைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்ற மிகவும் மன அழுத்தமுடையவர்கள், மூன்று, எந்த விதமான ஓய்வூட்டும் நுட்பங்களையும் அறியாத ஆராய்ச்சியாளர்கள் அல்லது பிறர்.



உதாரணமாக, ஏ.அய்.அய். எம். எஸ். நரம்பியல் துறை துணைப் பேராசிரியர் மன்வீர் பாட்டியா. மூச்சுவிடும் நடவடிக்கையின் போது, முன்பு மற்றும் பிறகு, ஆசிரியர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் இதைப் போன்ற பயிற்சிகளை முன்னெப்போதும் செய்து அறியாதவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டார்.


மூளைக் கணக்கு போடுபவர்களின் சில செல்களில் அதிகமான செயலூக்கமும், அதிகமான உஷர் நிலையும் இருந்ததை பாட்டியா கண்டறிந்தார். நெடுநாட்களாக இந்த பயிற்சிகளைச் செய்து வரும் ஆசிரியர்கள் குழுவில் எல்லா மாற்றங்களும் கணிசமான அளவில் இருந்தன.



மீண்டும் ஏ.அய்.அய்.எம்.எஸ். உயிர் - இரசாயனத்துறை கூடுதல் பேராசிரியை நீடாசிங், அல்சீ மர்ஸ், பர்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் போன்ற குறைபாடுகளுக்கு இட்டுச் செல்லும் அடிப்படைக் கூறுகளை சுதந்திரமாக வெளியிடுவதை ஆராய்ந்தார். இந்த பயிற்சிகள் இதைப் போன்ற தீங்குதரும் பொருட்களின் அளவை குறைத்ததைக் கண்டறிந்தார்.



சுரப்பியல் துறையின் மருத்துவர் தீரஜ், பயிற்சிகளுக்குப் பிறகு அழுத்த ஹார்மோன், கோரிஸ்டல் அளவுகள் குறைந்ததைக் கண்டறிந்தார். உடலின் முக்கியமான பாதுகாப்பு அமைப்பான இயற்கையான கொல்லும் செல்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி. இந்த பயிற்சிகளைச் செய்ய ஒப்புக்கொண்ட புற்று நோய் நோயாளிகளில் 60 சதவிகிதத்தினருக்கும் அதிகரித்ததை உயிர்நுட்பவியலாளர் எஸ்.என். தாஸ் கண்டறிந்தார்.



இந்த மூச்சுவிடும் பயிற்சிகள், நோயாளிகளுக்கு அதிவிரைவாக பிராணவாயு அளிக்கும் நடைமுறையான ஹெலர் வென்டிலே ஷனின் மற்றொரு வடிவமா அல்லது நன்கு அறிந்து கொள்ளப்படாத நடவடிக்கையா என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது வியக்கிறார்கள்.



எந்த அளவு தகவல்கள் குறைபாடாக இருக்கக் கூடும் என்பதை அறிந்துகொள்ள ஆய்வில் பயன்படுத்தப்பட்ட வழி முறைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது கவனித்து வருகின்றனர். “எல்லா ஆராய்ச்சிக்கும் அதற்குரிய குறைபாடுகள் உண்டு,” என்கிறார் உடலியல் கூடுதல் பேராசிரியர் கே.கே. தீபக். இவர் இந்த நுட்பங்களில் பணியாற்றியவர்.



ஆனால் ஆராய்ச்சியில் பாரபட்சத்தைக் குறைக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார். “அத்துமீறாத வகை முறைகளை நாம் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் அவர்.



பயிற்சிகளைச் செய்யும் ஒருவர் ஒரு கருவியின் பல்வேறு வயர்களால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அளவுக்கருவிகளின் குறிப்புகள் பாரபட்சமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். “நோயாளி வேறொரு நிலைக்குச் செல்லலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

தியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்

தியானம்-உடலையும், மனதையும் கட்டுப்படுத்த, வலிமையாக்க ஒரு எளிய கருவி.
இந்தக்கருவியை ஆப்பரேட் பண்ண கத்துக்கறது கொஞ்சம் சிரமம். ஆனா இதோட பயன்கள் ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்கும்.

எல்லாம் சரி எங்க இருந்து ஆரம்பிக்கிறது.
கொஞ்சம் அடிப்படையா போய் தெரிஞ்சிக்கலாமா?

என்னதான் வானம், பூமி, மலைன்னு குதிச்சாலும் தியானத்துக்கு அடிப்படை நம்ம மனசும். உடலும்தான். மனமும் உடலும் ஒத்து செய்யிற எல்லா செயல்களுமே ஏறக்குறைய தியானம்தான்.

உடல் அடிப்படை 

ஒரு உடலை உருவாக்கி உருவம் தருவது மில்லியன் கணக்கான செல்கள்தான்னு எல்லாருக்குமே தெரியம். கண்டிப்பா, செல் படம் வரைஞ்சு பாகம் குறிக்காம யாரும் பத்தாவது பாஸ் பண்ணமுடியாதுன்ற நிலமை இன்னிக்கு வரைக்கும் தொடருது.

சின்னச் சின்ன மணல் துகள்களைவைத்து கட்டிடம் கட்டுவது போல, அந்த சிறு சிறு செல்களால்தான் இவ்வளவு பெரிய உடல் உருவாக்கப்பட்டுள்ளது. செல்கள் மணல்துகள்களை விட மிகச்சிறியதாய் இருப்பதால் அவற்றை மைக்ராஸ்கோப் மூலம் மட்டும்தான் பார்க்க முடியும்.

 



“ஒவ்வொரு நொடியிலும் நம் உடலில் இலட்சக்கணக்கான செல்கள் இறக்கின்றன. புதிதாய் தோன்றுகின்றன. நம் புறத்தோலில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 30000 முதல் 40000 செல்கள் வரை இறந்து, உதிர்ந்து விழுகின்றன.”



சாதாரணமாக ஒரு செல் உருண்டை வடிவத்தில் இருந்தாலும், அசையும் போது விரல்போல நீண்டும், சில சமயம் தன்னோட உடலை உள் இழுத்தும் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு பக்கம் விரல் போன்ற நீட்சிகளினால் உணவை உள்ளிழுத்தும் மறுபுறம் கழிவுகளை வெளித்தள்ளியவாறும் செயல்படும்.

ஒரு செல் இரண்டாகப் பிரிந்து புதிய செல்லை தோற்றுவிக்கும்போது, முதலில் நடுவிலுள்ள நியூக்ளியஸ் (Nucleus) குரோமோசோம் அமிலங்கள் இரண்டாகப் பிரியும். அப்புறம் நியூக்ளியஸ் பிரியும், இறுதியாக வெளிப்புற சுவர் இரண்டாக பிரிந்து இரண்டு செல்களாக மாறும்.

உலகத்திலுள்ள உயிர்களின் முதல் முன்னோர் அமீபா பத்தி உங்களுக்கு தெரியுமா ? அந்த ஒருசெல் உயிரினம் இருக்கிற ஒரு சொட்டு தண்ணிய மைக்ராஸ்கோப்ல பாத்தா, அது அங்கிட்டும், இங்கிட்டும் நகர்றத பாக்கலாம். அதோட உணவா ஒருசில கிருமிகளை விழுங்கும், அதோட கழிவுப்பகுதியையும் கழிக்கும். அப்புறம் இரண்டா பிரிஞ்சு இரண்டு அமீபாவா மாறிடும் (இனப்பெருக்கம்). அந்த ஒரு சொட்டு தண்ணியோட ஒரு சைடுல கொஞ்சம் ஆசிடு கலந்து பாத்தா அமீபா வேக வேகமா இன்னோரு பக்கம் நீந்தி போறத பாக்கலாம். இந்த நுண்ணியிரிக்கு கூட போஷாக்கு வேணும், ஆக்ஸிஜன் வேணும்னு இதிலிருந்து தெரிஞ்சிக்கலாம்.

ஏறக்குறைய இது மனித செல்லை போலவே செயல்படுது. மனித செல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தா நம்ம உடலை உருவாக்க முடியாது. ஒரு டைப்பான செல்கள் எலும்புகளை உருவாக்குகிறது, இன்னொன்று சதைகளை உருவாக்குகிறது, இன்னுமொன்று இதயம், நுரையீரல், குடல், கண், காது, சருமம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான செல் கூட்டங்கள் இருக்கு.

இந்த செல்கள் தாமாகவே ஒன்று சேர்ந்து உடல் உருவத்தை செய்து முடிக்கிறது.

இவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் பில்டிங் காண்ட்ராக்டுக்கு பிளான் போட்டது யாரு??

செல்லுக்கு நடுவுல இருக்குற நியூக்ளஸில தான் இந்த பிளானோட மேட்டரே இருக்கு. நியூக்ளஸ்-குள்ள குரோமோசோம்னு ஒன்னு இருக்கு. அதுக்குள்ள ஜீன்ஸ் அப்படின்ற ஒருசில பகுதிகள் இருக்கு. இந்த ஜீன்ஸ்தான் செல்லோட அமைப்பை தீர்மானம் செய்யுது.

உதாரணமா ஒருசில உறுப்பு தரைத்தளம் போல இருக்கு. தோல் ஒரு பரந்த ஏரியா. இதுல ஒன்னுமேல ஒன்னா செல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. அடியில் உருண்டைய இருக்கும் செல்கள், மேலே போகப்போக தகடு மாதிரி உருப்பெற்றும், அதுக்கும் மேலே ஈரம் நீங்கிய துகள் மாதிரியும் உருவாகியிருக்கு. நுரையீரலில் உள்ள செல்கள் மிக நுண்ணியமாக காற்று கடந்து செல்லும் அளவிற்கு சன்னமானவை. குடலில் உள்ள செல்கள் கனசதுரமானவை, இதில் நீர்ப்பகுதி அதிகம். ஏரியாக்கு ஏரியா ஜீன்ஸ் தேவைக்கு ஏற்றாப்போல செல்களை உருவாக்குகிறது.
அப்புறம், வெறும் மணலை குமிச்சு வைச்சு பில்டிங் கட்ட முடியுமா?. பேஸ்ட்டு, சிமெண்டு வேணுமில்ல. செல்களை தாங்கி நிக்குற அணுக்கள் கடினமான நரம்பு போல அமைஞ்சிருக்கும். இதுதான் பில்டிங்ல சிமெண்ட் பண்ற வேலய பண்ணுது. எலும்பையும், தசையையும் பிரியாம ஒட்ட வைக்குது. இதை இங்கிலிபீசுல connective tissue அப்படின்னு சொல்வாங்க. ஒரு சில இடத்துல செல்களை சுருங்கியும், விரியவும் வைக்குது (நுரையீரல், தோல்). இதுவும் உடலில் உள்ள முக்கிய அடிப்படை தன்மை. செல் வேலை செய்ய கரண்ட் வேணுமே. அதை உற்பத்தி செய்ய எரிபொருள் (சர்க்கரை) எரிச்சு சாம்பலை (தண்ணீர், கார்பன்-டை-ஆக்சைடு, உப்புகள்) வெளிய தள்ளிடும் (அமீபா போல).

இந்த சிக்கலான ரசாயன மாற்றத்தை ஏ.டி.பின்னு சொல்றோம். இதுதான் ஒவ்வோர் உயிருக்கும் அடிப்படை சக்தியா இருக்கு ATP (Adenosine Tri Phosphate). தேவைக்கு ஏத்தாப்புல ஏ.டி.பி. சிறு சிறு துண்டுகளாவும் பிரிஞ்சு செயல்படுது.

இந்த உலகத்திலுள்ள எல்லா பாலூட்டிகளோட செல்களனைத்தும் ஒரே பரிமாணத்தில்தான் இருக்கின்றன.

அப்புறம் எப்படி ஒன்னு திமிங்கலமாவும், இன்னோன்னு மனிதனாவும் உருவாகியிருக்கு??

இதுக்கு பேருதான் படைப்பு.

அந்த படைப்புக்கு இன்னோரு பேரு டி.என்.ஏ.[DNA]





இவருதான் எல்லா செல்களுக்கும் Top Level Management. ஒவ்வொரு செல்லும் என்ன பண்ணணும். எதை தயாரிக்கணும், எதை ஒதுக்கணும்னு இவருதான் கட்டளை போடுகிறார். DNAவை ஒரு சிற்பிக்கு ஒப்பிடலாம். அதோட வேலையே இந்த பெரிய வாழ்க்கைய டிசைன் பண்றதுதான். ஆனாலும் top level management, அப்படின்றதால அந்த வேலைய அது செய்யாது அதோட அசிஸ்டன்ட் ஆர்.என்.ஏ கிட்ட விட்டுடும். RNA, DNA சுருள்களை அழுத்தி அதுல இருக்கிற டேட்டாவ காப்பி பண்ணிக்கும். அப்புறம் அதோட டாங்குவேஜிக்கு மாத்தி வேல செய்ய ஆரம்பிக்கும். உதாரணமா, 20 டைப்பான அமினோ அமிலங்களை எடுத்து கம்பில மணி கோர்குற மாதிரி கோர்த்து இதய செல்களையும், தசைகளையும் உருவாக்குகிறது. இதேபோல உடலிலுள்ள எல்லா செல்களும் உருவாக்கப்படுது.



குறிப்பிடத்தகுந்த ஒரு விதிவிலக்கு நம்ம மூளைதான். நாம பிறக்கும் போதே நம்ம வாழ்நாள் முழுசுக்கும் தேவையான அளவு மூளைச் செல்களோட பிறக்கிறோம். தேய்ஞ்சு போன, ரிப்பேர் ஆன செல்கள் அனைத்தும் மடிஞ்சு போயிரும். அதுக்கு பதிலா புது செல்கள் உருவாவதில்லை.

ஒரு செல் 600 வகையான என்சைம்களை உருவாக்க கூடிய ஒரு உற்பத்திக்கூடம். ஆர்.என்.ஏ சொல்றமாதிரி கேட்டு எப்போ எது வேணுமோ அதை உருவாக்கி புரதங்களை தொகுக்குது.

உதாரணமா நாம வாயில போடுற ஒரு மீன் துண்டிலுள்ள புரதத்தை எடுத்து, துண்டு துண்டா உடைச்சு, அமினே ஆசிடுகளா மாத்தி, கட்டை விரலுக்கு கொஞ்சமாவும், கிட்னிக்கு கொஞ்சமாகவும் மனித புரதமாக மாற்றி கொடுக்கிறது.

செல்லினுடைய என்சைம்கள் சிக்கலான ஹார்மோனையும், நோய் எதிர்க்கும் சக்தியையும் உடலில் கட்டுகின்றன.

செல்லின் மேல் உறை ஒரு சிக்கலான துணைப்பொருளாக உள்ளது. அது கேட் வாட்ச் மேனா வேலை செஞ்சு எத உள்ள வர அனுமதிப்பது, எதை ஒதுக்குவது என தீர்மானிக்கிறது, சமவிகித உப்பு, சர்க்கரை, நீர் இன்னும் எவ்வளவோ பொருட்களை செல்லில் வைத்திருக்கிறது.

உலகில் எந்த ஒரு வேதியியலாரும் செய்ய முடியாதவற்றை செல்கள் சாதாரணமாக செய்துகொண்டு இருக்கின்றன.

உயிர் முழுவதும் இந்த ஒற்றைச்செல்களை சார்ந்து தான் உள்ளது.