Wednesday, August 17, 2011

விடலைப்பருவத்தில் வளர்ச்சி

  • அயோடின் தைராக்ஸின் எனப்படும் தைராய்டு ஹார்மோன் உண்டாவதற்கான மிக முக்கிய மூலக்கூறு ஆகும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் ஒரு நபரின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும்
  • ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100-150 மில்லிகிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு நபரின் வயது மற்றும் உடல் செயல் நிலையை பொருத்து வேறுபடும்
  • அயோடின் குறைபாடு ஒழுங்கின்மைகள் என்பது இந்தியாவில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்து குறைபாட்டு ஒழுங்கின்மையாகும்
  • கர்ப்பிணி பெண்களில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது இது கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது
  • நமக்கு நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து முக்கியமாக கடல் உணவு மற்றும் தண்ணீரிலிருந்து அயோடின் கிடைக்கிறது
  • கோஸ், காலிபிளவர், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் காணப்படும் ஒரு வகை பொருள், உடலானது அயோடின் உபேயாகப்படுத்துவதை தடுக்கிறது
  • அயோடின் குறைபாட்டு ஒழுங்கின்மைகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பினை உணவில் பயன்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment