இரத்தத் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் பொருள் உருவாவதற்கு இரும்புச் சத்து முக்கிய தேவை ஆகும். இந்த ஹீமோகுளோபினானது பிராணவாயுவினை நுரையீரலிலிருந்து இரத்தத்தின் மூலம் உடற் திசுக்களுக்கு எடுத்தும் செல்லும் செயலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் இரத்த சோகை என்பது சிறுபிள்ளைகள், பருவ வயது பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களில் ஏற்படும் ஒரு முக்கிய உடல் நலக் கேடு ஆகும். மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர், முக்கிய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தேசாகையினால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தசோகையினால், இளைஞர்களின் செயல்திறன் மற்றும் சிறுபிள்ளைகளில் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுபொருட்கள்
- கீரை வகைகள், உலர்ந்த பழவகைகள், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு ஆகியவைகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளன. 3-5 சதவீதம் வரை இரும்புச்சத்து மட்டுமே உடலானது தாவரப்பொருட்களிலிருந்து உட்கிரகிக்கிறது.
- இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி
- நெல்லி, கொய்யா மற்றும் சிட்ரஸ் வகை பழங்களான கமலா ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களிலிலிருக்கும் வைட்டமின் சி, உடலானது இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவுகிறது
- உணவிற்கு பின் தேநீர் (டீ) மற்றும் காபி சாப்பிடுவதை தவிர்க்கவும்
No comments:
Post a Comment