Monday, July 29, 2013

கர்ப்பகாலத்தில் எடுக்கும் ஸ்கேன் எது எது ?

ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன்.  இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.
ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ? 
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு  அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.
ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்? 
முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம். முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின் மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை கண்டுபிடிக்க ஸ்கேன்  அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை இல்லையென்றால், முதல்  கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது  இரத்தபோக்கு ஏற்பட்டால் உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6 வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்  பரவாயில்லை.
முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.
சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு  இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா  என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி  இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும்  ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்.
DOWN’S SYNDROME  என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.
அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ? 
20-22 வாரங்களில் எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும்  தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.
கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில் செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22 வாரங்களில்)  செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும் அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம் படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.
இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?
பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?
ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.
ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன்  என்பது  நிச்சயமாக  ஒரு  உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.

Saturday, July 27, 2013

பட்டு A to Z




முதல் சேலைபிரியமானவர்கள் பரிசாகத் தந்த சேலைகூறைச் சேலை,வளைகாப்புச் சேலை... ஒவ்வொரு சேலையும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான  நினைவைச் சுமந்து கொண்டிருக்கும். அதுதான் பட்டுச் சேலையின் சிறப்பு. எத்தனை சேலை இருந்தாலும்அலுக்காது. நைந்துகரைந்துஜரிகை உதிர்ந்து கொட்டுகிற நிலைக்குப் பழையதாகிப் போனாலும்சேலையின் சென்டிமென்ட் அத்தனை சீக்கிரத்தில் அதை அப்புறப்படுத்த விடாது.  அந்தளவுக்கு பட்டின் மேல் பற்றுண்டு பெண்களுக்கு. 


பட்டுக்கு மட்டும் ஏன் இத்தனை பகட்டு?


பட்டின் வரலாற்றினைப் புரட்டினால் தெரிகிறது உண்மை...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்புசீனப் பேரரசி ஒருவர்தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போதுமுசுக்கொட்டைச் செடியில் அழகாகக்  கட்டப்பட்டிருந்த ஒரு கூட்டினைப் பார்த்திருக்கிறார். அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அது நீண்டுகொண்டே போகமொத்தக்  கூடுமேஒரே இழையால் ஆன விவரம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்த மற்ற கூடுகளையும் சேகரித்து,இழைகளைப் பிரித்து,  சிறியதாக ஒரு உடை தயாரித்துப் பார்த்தாராம். 

அந்த நூலிழையும்அதில் தயாரித்த உடையின் நேர்த்தியும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போகபட்டு நூலாடைகள் தயாரிப்புக்கு அதுவே  ஆரம்பமாக அமைந்திருக்கிறது. ஆனாலும்பட்டு என்பது ராஜகுடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது என்று ரகசியம் காக்கப்பட்டதாம். அதன் பிறகு சுமார்  2,500ஆண்டுகள் கழித்துஒரு ரோமானிய மன்னன்,சீன இளவரசியைத் திருமணம் செய்யஅதுநாள் வரை சீனர்களுக்கு மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பட்டுஇடம் பெயர்ந்திருக்கிறது. 

இருப்பினும்பட்டுப் புழுவை வளர்க்கத் தெரியாததால்அதையடுத்த சில காலத்துக்கும் சீனாவில் மட்டுமே பட்டின் கொடி பறந்து கொண்டிருந்ததாம்.  இதைத் தெரிந்து கொண்ட ஜப்பானியர்கள்பட்டுப் புழு வளர்க்கத் தெரிந்த சீனப்பெண்களைக் கடத்திக் கொண்டும்வேலைக்கு அழைத்துச் சென்றும்,  அவர்கள் மூலம் தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டுபட்டு நூல் உற்பத்தியில் சீனர்களையே தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

அதன் பிறகு ஜப்பான்பட்டு நெசவுக்கான காப்புரிமையை மற்ற நாடுகளுக்கும் தர முன் வந்ததையடுத்துஇந்தியா உள்பட பல நாடுகளுக்கும் பட்டு  நெசவு பரவிபட்டின் புகழ் உலகெங்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு கிடைத்ததாலோ என்னவோ பட்டுக்கு அத்தனை பெருமை!  பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல்பட்டில் காசைக் கொட்டிபீரோ நிறைய அடுக்கி வைக்கிற உங்களுக்குத் தெரியுமா பட்டு எப்படித்  தயாராகிறது என்று?

பட்டின் வகைகள் 

ஒக் டசார் பட்டு 

ஒக் என்கிற செடியை உணவாகக் கொள்ளும் பட்டுப்புழுவிலிருந்து கிடைக்கும் இது மெலிதாக இருக்கும். மணிப்பூர்இமாசலப்பிரதேசம்அசாம்,  மேகாலயாஜம்மு,காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பட்டு உற்பத்தியில் உலகளவில் நம்பர் 1 -சீனா.

டசார் பட்டு 


இதன் இழைகள் தாமிர நிறத்தில் சற்றே முரடாக இருக்கும். நெகிழ்வுத்தன்மை இருக்காது. மெத்தை விரிப்புக்கும்உள் அலங்காரங்களுக்கும் அதிகம்  பயன்படுகிறது. ஜார்கண்ட்,சத்தீஸ்கர்ஒரிசாமகாராஷ்டிரம்,மேற்கு வங்காளம்ஆந்திரா மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் இந்தப் பட்டுத் தயாரிப்பில் சிறந்தவர்கள்.

மல்பெரி பட்டு 

உண்ணும் உணவுக்கேற்பவேறுபட்ட புழுக்களில் இருந்து வணிகரீதியாக வகை பட்டுகளைப் பெறலாம். அவற்றில் முதலிடம் மல்பெரி பட்டுக்கு.  மல்பெரி செடியை உணவாக உட்கொள்ளும் ஒரு வகை பட்டுப்புழுவிலிருந்து இந்தப் பட்டு கிடைக்கிறது. இந்தப் பட்டுப்புழுக்களை அறைகளிலேயே  வளர்க்கலாம். இந்தியாவில் கர்நாடகாஆந்திராமேற்கு வங்காளம்தமிழ்நாடுஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மொத்த பட்டு உற்பத்தியில் 92  சதவிகிதம் மல்பெரி பட்டுதான். அணிவதற்கு மிக மென்மையானது இது.

முகா பட்டு 

இதன் பூர்வீகம் அசாம். இது இயற்கையான மஞ்சள் நிறத்தில் இருக்கும். நறுமணமிக்க செடிகளைத் தின்று வளரும் பட்டுப்புழுக்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் சற்று கா
ஸ்ட்லியானது.

எரி பட்டு 

ஆமணக்கு இலைகளை உட்கொள்ளும் பட்டுப்புழுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்காக  பழங்காலத்தில் இருந்து உற்பத்தி செய்து பயன்படுத்தக் கூடிய பட்டு வகை இது. இந்தியாவின் வடகிழக்கு மற்றும் அசாம் மாநிலங்களில் தயாராகிறது.

பட்டுப்புழு வளர்ப்பு முறையை ஆங்கிலத்தில் சில்க் ஃபார்மிங்’ என்கிறார்கள். பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலமான 30 நாள்களுக்கு மிகப்  பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தரமான மல்பெரி இலைகளைத் தீனியாகத் தரவேண்டும். மனிதர்களை மாதிரியே அவற்றுக்கும் சுத்தமான சுற்றுச்சூழலும்,பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் அவசியம். அந்தச் சூழலைக் கொடுக்கும்படியான ஒரு தனி புழுவளர்ப்பு மனை அமைத்து,பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும். 

இந்த புழு வளர்ப்பு மனையில் வருடத்துக்கு 10 முதல் 12 முறைகள் புழு வளர்ப்பு நடைபெறும். இப்படிப் பார்த்துப் பார்த்து பதவிசாகபத்திரமாக வளர்க்கப்படுகிற பட்டுப்புழுக்களை ஒரு கட்டத்தில்கொத்தாகப் பிடித்துகொதிக்கிற வெந்நீரில் போடுவார்கள். துடிக்கத் துடிக்க இறக்கும் அவை,  அத்தனை நாள் தன்னைப் போஷாக்காக வளர்த்தவர்களுக்கு நன்றிக்கடனாகபட்டுநூலை விட்டுச் செல்லும். அந்தக் கட்டத்தில் பட்டுப்புழுக்களை  கொல்லாவிட்டால்அவை அடுத்து பட்டாம்பூச்சிகளாக மாறி,பறந்து விடுமே!

ஒரு கிலோ பட்டு நூல் தயாரிக்க, 3 ஆயிரம் பட்டுப்புழுக்கள் சுமார் 104 கிலோ மல்பெரி இலைகளைத் தின்ன வேண்டும். சுத்தமான பட்டுக்காக 5  ஆயிரம் பட்டுப்புழுக்கள் உயிரிழக்க வேண்டும். இது சிம்பிளான பட்டுச்சேலைக்கான கணக்கு. அகலமான ஜரிகை வைத்த பார்டர்உடல் முழுக்க  ஜரிகை என நீங்கள் விரும்பும் புடவையின் ஆடம்பரத்தைப் பொறுத்துஉயிர்த்தியாகம் செய்கிற பட்டுப்புழுக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே  போகும்.

- சாஹா
படம்:  புதூர் சரவணன்
நன்றி குங்குமம் தோழி and 
தினகரன் நாளிதழ் 


Thursday, July 25, 2013

சீனா ஜோசியம் என்ன குழந்தை பிறக்கும் அட்டவணை?

இனி சோசியத்துக்கு போலாம்! இதுதான் அட்டவணை!




இதுல 18,19,20, என்று உள்ளது கர்பிணிகளின் வயது, ஜனவரி,பிப்ரவரி,என்று உள்ளது குழந்தை உருவான மாதம் இரண்டையும் இணைத்துப்பார்த்தால் பெண்ணா இல்லை ஆணா என்று தெரிந்து விடும் இது 98.7% சரியாக இருக்கிறது.

Example Chart:-

Tuesday, July 16, 2013

கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீங்கள் கர்ப்பம் என்பது தற்போது உறுதிசெய்து இருக்கீறீர்கள் என்றால் உங்களுக்கு பலர் ஆலோசனை கூறுவார்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நண்பர்கள் வட்டம் என அனைவரும் உணவு சம்பந்தமான அறிவுரையிலிருந்து அனைத்தையுமே கூறுவார்கள். உணவு வகைகள் அனைத்துயும்  சாப்பிட முடியாது. சாப்பிட நினைத்தாலே வாந்தி வரும் என பல மாறுதல்கள் நமது உடலுக்குள் நடக்கின்றது.. கர்ப்பகாலத்தில் ஆபத்தை  விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் ஏனெனில் கர்ப்பகாலத்தில் ஒவ்வாத உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்  உணவாக உள்ளது.. கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இதோ

சீஸ் வகைகள்

கர்ப்ப காலத்தில் சீஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். பல வகை சீஸ்கள் உள்ளது. மென்மையான பாலாடைக்கட்டியான வெள்ளை நிறத்ததில் உள்ள  பாலாடைக்கட்டியில் நீல நிறங்களை சேர்க்கின்றனர். வெண்ணெய் தயாரித்தலில் அச்சு பயன்படுத்தும் போது லிஸ்டீரியா சேர்க்கப்படுகிறது.  லிஸ்டீரியா சேர்ப்பது அரிதானது என்றாலும் நோய் தொற்றை ஏற்படுத்தி கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பதற்கும் வழிவகுக்கிறது. பல  உணவுகளில் லிஸ்டீரியா பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வெண்ணெய் சாப்பிட விருப்பப்பட்டால் கடின  தன்மை கொண்ட வெண்ணையான சீதார்(நீலீமீபீபீணீக்ஷீ) பாலாடைக்கட்டியை சாப்பிடலாம். அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது.

முட்டைகள்


கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் முட்டைகளை சாப்பிடலாம் ஆனால் நன்கு வேகவைக்காத முட்டைகள் சால்மோனெல்லா பாக்டீரியாவை  கொண்டிருப்பதால் சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் நன்கு வேகவைத்த முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்கு சமைக்கப்படாத  முட்டையுடன் சேர்த்த பொருட்களில் மேயனைஸ் கொண்டிருப்பதால் அவை கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் தவிர்க்க பட வேண்டியது. முட்டையின்  மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை நன்கு வேகவைத்த பின் சாப்பிட்டால் பாதுகாப்பானது.

வைட்டமின ஏ அதிகளவு கொண்டிருக்கும் உணவுகள்


முன்பு சாப்பிட்ட உணவுகளில் வைட்டமின் ஏ எடுத்துக்கொண்டதை விட குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வைட்டமின் ஏ நிறைந்த  உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். கல்லீரல் போன்றவை அதிக வைட்டமின் ஏ கொண்டுள்ளது. 

குறிப்பிட்ட மீன் வகைகள்

தயார் நிலையில் வைக்கப்பட்ட மீன் வகைகளான டுனா, ஸ்வோர்டுபிஷ்ஷில் மற்றும் சுறா மீன்கள் போன்றவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை  பாதிக்கும் பாதரசத்தை உயர்ந்த அளவு கொண்டுள்ளது. எண்ணெய் பசை அடங்கிய மீன்களான சல்மான் பிரஷான டுனா கானாங்கொளுத்தி, ஆகியவை  பாதுகாப்பானது. வாரத்தில் ஒரு முறை சாப்பிடும் போது இரண்டு துண்டு மீன்களை எடுத்துக்கொள்ளலாம்.

காஃபின்

காஃபின் பல்வேறு உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் கலக்கப்படுகிறது. காஃபின் குறைந்த எடையுள்ள குழந்தை மற்றும் கருச்சிதைவு போன்ற  ஆபத்தை அதிகரிகும் ஆதலால் கவனமாக இருக்க வேண்டும்.

Tuesday, July 02, 2013

புற்று நோயை தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.

ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்பு தொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கும்.

கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுது தங்கம் என்று கூற வாய் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம் விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.

ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்கு திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி… ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்ற கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாக புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரம்ப நிலை புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில், இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவை சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ‘‘பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்’’ என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய், அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும், அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் ‘திரவத்தங்கம்’ என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்பு செய்து, இரண்டாம் முறை வடிகட்டும் எண்ணெய் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், இது சுத்திகரிப்புக்கு உட்பட்டு கிடைப்பதால்.

மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள் பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயை, அதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்ட பி ன்பு செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு (Deep Fry) ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போல சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைக் காலையில் இரு சொட்டுகள் வாயில் இட்டு நன்கு ஆயில் புல்லிங் செய்துவிட்டு வெளியில் துப்பாமல் முழுங்கிவிட்டால் வயிற்றில் அமிலம் சுரப்பது (Acidity) அறவே நீங்கி விடும் என்று ஆலிவ் எண்ணெய் சூப்பர் மார்க்கெட் கூறுகிறது. 10 சொட்டு ஆலிவ் எண்ணெய் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நமைச்சல், கல் போன்றவற்றை அகற்றி விடும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.

அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

Tuesday, January 29, 2013

நாடா இல்லை வெறும் காடா?





ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்த அல்லது தூண்டும் மனித மிருகத்துக்கு தண்டனை  நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது  

அதனை தெரிந்து கொள்ளுங்கள்
சீனாவில்,நீதி விசாரணையின்போது குற்ற‍ம் நிரூபி க்கப்பட்டால் 
வன்கொடுமை புரிந்தவனுக்கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்
மலேசியாவில்,குற்றவாளியை மரணதண்டனை கொடுத்து அவனை கொன்றுவிடுவார்கள்.
யுனைடெட் அரபு எமிரேட்டில், ஏழு நாட்களுக்குள் விசாரித்து குற்றவாளியை 
தூக்கில் தொங்க விட்டு மரண தண்டனையை நிறைவேற்று வார்கள்.
ஈரானில்,வன்கொடுமை புரிந்த குற்றவாளி என்று உறுதியானதும் அடுத்த‍ 24 மணி நேரத்திற்க்குள்,
அவனை கற்களால் தாக்கியும் அவனுக்கு பொது இடத் தினில் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்றுவார்கள்.
ஆப்கானிஸ்தானில்,வன்கொடுமை குற்றவாளியை பொது இடத்தில் அவனை தூக்கி லிட்டு, 
அவனது தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக தண்டிக்க‍ப்படுவார்கள்.
மங்கோலியாவில்,இந்த வன்கொடுமைக்கு ஆளாகி தனது வாழ்க்கை இழந்த‌
அந்த பாதிக்க‍ப்பட்ட‍ அப்பாவிப் பெண்ணின் மூலமாகவே
அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 
ஈராக்கில்,வன்கொடுமை குற்றவாளியை அவன் கடைசி மூச்சு இருக்கும் வரை
அவனை கல்லால் அடித்தே கொல்லப்படும் தண்டனையை நிறைவேற்றுகிறார்க‌ள். .
தாலிபானில்,வன்கொடுமை குற்றவாளியின் கால்வேறு கைவேறு என்று ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எடுத்தும்,
கல்லால் அடித்தும் கடைசியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் தண்ட னை உண்டு.
இன்னும் பல நாடுகளில்
பெண்களுக்கு எதிராக குற்ற‍ம் புரிபவர்களுக்கு உடனடியாக கொடூரமான தண்டனை விதிக்க‍ப்பட்டு வருகிறது.ஆனால்,
நம் இந்தியாவில் மட்டும் பல பெண்கள் இயக்கமும்,மனித உரிமை கழகமும்,
பொது மக்களும் போராட்டம் செய்தால்தான் கைதே செய்வார்கள் குற்றவாளியை  
நம் ஊர் காவல்துறை பிறகு,குற்றவாளிக்கு
குறிப்பிட்ட‍ வருடங்கள் வரை சிறைத் தண்டனை என்னும் பெயரில்  24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும். 
தினந்தோறும் வேளை தவறாமல் நல்ல‍ சாப்பாடும் அரசாங்கம் வழங்கி வருகிறது.
அப்புறம் நம் நாட்டில் குறைந்து விடும்தானே பெண்கள் மீதான வன்புணர் கொடுமை??????? 

Monday, January 28, 2013

பவர்கட் பிரச்னையா...சோலாருக்கு மாறுங்க !


'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால், அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.
மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த  விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.
''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்... அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.
பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்... குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.
தற்போது... வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்...'' என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.
''சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!'' என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் 'மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்'. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ''சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!
வீடுகளில்... ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ... மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்'' என்று சொன்னார்.
எல்லாம் சரி... சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?
அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ''அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை... சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்... மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.
இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்... (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்'' என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,
''இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல... இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!'' என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!
நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!

சோலார் தரும் லாபம்!
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்...  டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...)  840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).
இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது... 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்... 'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்... மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.
சூரிய மின்சாரம்...     அசத்தும் குஜராத்!
ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து  214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது, குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.
தமிழகத்திலும் சோலார் பார்க் அமைத்தால்?!
சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in என்ற வலைதளத்தை அணுகலாம்.
தொடர்புக்கு: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே. சம்பத் மாளிகை
ஐந்தாவது மாடி, 68, காலேஜ் ரோடு
சென்னை 6, 
தொலைபேசி: 044-28224830.

நன்றி: அவள் விகடன், 23-10-2-12
சா.வடிவரசு
படங்கள்: எம்.உசேன், ஆ.முத்துகுமார், ஜெ.வேங்கடராஜ்